வியாழன், 28 பிப்ரவரி, 2013

மத்திய பொது பட்ஜெட்: மனிதநேய மக்கள் கட்சி கருத்து


வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவரிடம் தமுமுக கோரிக்கை

வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவரிடம் தமுமுக கோரிக்கை

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் இன்று (27.02.2013) பிற்படுத்தப்பட்ட ஆணையத் தலைவர் நீதியரசர் ஜனார்த்தனன் அவர்களை நேரில் சந்தித்தார்கள். இச்சந்திப்பின் போது வேறு மதத்திலிருந்து இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்கள். அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:
“தற்போது நடைமுறையில் உள்ள அரசாணைகளின்படி இந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்புகளிலிருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறியவர்களை பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக கருத அரசாணை உள்ளது போல இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாறும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர்களை பிற்படுத்தப்பட்ட அல்லது மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பாக கருத அரசாணை இல்லாததால் இஸ்லாம் மதத்திற்கு மாறிய வேறு மதத்தினரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என கருத இயலாது என அரசு தெரிவித்து வருகிறது. இவ்விஷயம்...

மத்திய பொது பட்ஜெட்: மனிதநேய மக்கள் கட்சி கருத்து

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
இன்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தாக்கல் செய்திருக்கும் நிதிநிலையானது சில வரவேற்புகளையும், சில அதிருப்திகளையும் கொண்டிருக்கிறது.
வேளாண் துறைக்கு 27,049 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பதும், கிராமப்புற வளர்ச்சிக்கு 80,196 கோடியும், சுகாதார மேம்பாட்டுக்கு 37,300 கோடியும் ஒதுக்கீடு செய்திருப்பதும், தூத்துக்குடி துறைமுக மேம்பாட்டுக்கு 7,500 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதும் வரவேற்கத்தக்கது. நாடெங்கிலும் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கும் சூழலில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு இல்லாதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
மறைமுக வரி மூலம் 4,500 கோடி ரூபாய் மக்கள் தலையில் சுமையாக திணிக்கப் பட்டுள்ளது. விலைவாசியைக் குறைக்க உருப்படியான எந்த அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இல்லை. சிறுபான்மை மக்களின் கல்வி மேம்பாடு குறித்து நாடு தழுவிய திட்டங்கள் எதுவும் இல்லை.
உணவுப் பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த 10,000 கோடி மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ள...
முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு

முழு மது விலக்கு கோரி தொடர் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் காந்தியவாதி சசி பெருமாளுடன் பேரா எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ சந்திப்பு

தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தக் கோரி சேலத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள் 29 வது நாளாக தொட உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி 30 அன்று சென்னை கடற்கரையில் உள்ள...

தமிழகத்திற்கு திருப்தி அளிக்காத ரயில்வே பட்ஜெட்! மனிதநேய மக்கள் கட்சி கருத்து

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
17 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பவன்குமார் பன்சால் அவர்கள் சமர்ப்பித்த ரயில்வே பட்ஜெட் அனைவரையும் த...
தேனி மாவட்டத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம்

தேனி மாவட்டத்தின் நிர்வாகிகள் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம்

தேனி மாவட்டத்தின் நிர்வாகிகதேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் 24/2/2013 அன்று போடிநாயக்கனூரில் நடைபெற்றது. தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது தலைமை தாங்கினார். மமக அமைப்பு செயலாளர் மைதீன் உலவி முன்னிலை...
பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம். தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது நேரில் வாழ்த்து

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடைபயணம். தமுமுக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது நேரில் வாழ்த்து

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடந்த டிசம்பர் மாதம் நெல்லை மாவட்டம் உவரியில் இருந்து மதுரை வரை நடைபயணம் சென்றார். அதன் இரண்டாம் கட்டமாக காஞ்சி மாவட்...
பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை! மமகவினர் கைது!

பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் படுகொலையைக் கண்டித்து இலங்கைத் தூதரகம் முற்றுகை! மமகவினர் கைது!

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை பாலகன் என்றும் பார்க்காமல் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது. லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சியில் இக்கொடூரத்தைப் பார்த்த அனைவரும் அத...
 

கொடிக்கால்பாளையத்தில் பயங்கர தீ விபத்து: , த.மு.மு.க.வினர் மிக விரைவான மீட்புப் பணிகளில் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து ஈடுபட்டனர்

கொடிக்கால்பாளையத்தில் பயங்கர தீ விபத்து: , த.மு.மு.க.வினர் மிக விரைவான  மீட்புப் பணிகளில் தீயணைப்புத்துறையினருடன் இணைந்து ஈடுபட்டனர் திருவாரூர் நகரம், கொடிக்கால்பாளையத்தில், நேற்று பிப்ரவரி 27, 2013, புதன்கிழமை மதியம் 2.15 மணிக்கு நகரட்சி துவக்ப்பள்ளி அருகில் உள்ள குடிசை விட்டில் திடிரென தீ பிடித்தது.கற்று பலமாக விசியதால் அடுத்த உள...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக