திங்கள், 30 ஜனவரி, 2012

தர்பியா முகாம் -துபை மண்டல தமுமுக


தர்பியா முகாம் -துபை மண்டல தமுமுக

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால்....
 27 -01 -2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் முதல் இஷா வரை 
                   துபை த மு மு க மர்க்கஸில்
தர்பியா நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. அதுசமயம் நிகழ்ச்சியின் ஆரம்பமாக துபை மண்டல தமுமுக தலைவர் அதிரை அப்துல் ஹமீது (ஷாகுல் பாய் ) அவர்கள் தற்பெருமை என்ற தலைப்பிலும் அதை தொடர்ந்து சென்னை பிலால் அவர்கள் அற்ப உலகம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 
நிகழ்ச்சியின் இறுதியாக மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் நிறைவுரை நிகழ்த்தினார்கள். நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது துவாவுடன் நிறைவடைந்தது .
அல்ஹம்துலில்லாஹ்

அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சி


அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சி

E-mail Print PDF
அல்லாஹ்வின் கிருபையால் அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி 27-01-2012 மக்ரிப் தொழுகைக்கு பின்னர் நடைபெற்றது.கத்தாரா கிளை தமுமுக தலைவர் காட்டுமன்னார்குடி சகோதரர் அஸ்கர் அலி தலைமை தாங்கினார்.மண்டல உலமாக்கள் அணி செயலாளர் கொள்ளுமேடு முஹம்மது ரிபாயி திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்த்தினார்.
அமீரக தமுமுக தலைவர் சகோதரர் அதிரை அப்துல் ஹாதி தியாகம் என்ற தலைப்பில்,சஹாபா பெண்மணிகள் தங்களது ஈமானுக்கு கொடுத்த முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.நமது மறுமை வாழ்க்கைக்காக இம்மையில் நாம் தயாரிப்பு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து தனது உரையில் வலியுறுத்தினார்.
இறுதியாக மண்டல பொருளாளர் நாச்சிகுளம் சகோதரர் அசாலி அஹமது நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் அல் அய்னில் வசிக்கும் தமிழக சகோதரிகள் தங்களது கணவர், குழந்தைகளுடன் பெருமளவு கலந்து கொண்டனர்.
AL Ain TMMK

Al Ain TMMK

மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிபாயி போட்டியின்றி தேர்வு - தினத்தந்தி செய்தி


மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிபாயி போட்டியின்றி தேர்வு - தினத்தந்தி செய்தி

E-mail Print PDF
தாம்பரம், ஜன.29

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவராக ஜே.எஸ்.ரிபாயி போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் முறையே தாம்பரம் மற்றும் மேடவாக்கத்தில் நடைபெற்றது. இதில் மாநில புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இது குறித்த த.மு.மு.க. மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தாம்பரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:


மாநில தலைவர் ஜே.எஸ்.ரிபாயி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிபாயி, பொருளாளராக ஒ.யு.ரஹ்மத்துல்லா, த.மு.மு.க. பொதுச் செயலாளராக பி.அப்துல்சமது, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக தமீமுன் அன்சாரி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் நிர்வாக குழு மூத்த தலைவர்களாக நானும், ஹைதர் அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

இடஒதுக்கீடு
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின் படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தானே புயலால் கடலூர், விழுப்புரம், நாகை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட சேதத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் அப்பகுதி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது. மேற்கு வங்காளத்தில் அணு உலைகளை அனுமதிக்கமாட்டோம் என அந்த மாநில அரசு அறிவித்து இருப்பது போல தமிழக அரசும் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

ஆதரவு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகச் சிறப்பான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். தமிழக அரசு எடுத்துவரும் மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி என்றும் ஆதரவாக இருக்கும்.

தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர மத்திய அரசை வலியுறுத்தி த.மு.மு.க. சார்பில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.எஸ்.ரிபாயிக்கு மூத்த தலைவர்கள் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.ஹைதர் அலி வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் யாக்கூப் நன்றி தெரிவித்தார்.

நன்றி - தினத்தந்தி 29-01-2012 பககம் 8

தமுமுக-மமக பொதுக்குழு தீர்மானங்கள்


தமுமுக-மமக பொதுக்குழு தீர்மானங்கள்

E-mail Print PDF
1. தமிழக இடஒதுக்கீடு
தமிழகத்தில் தற்போது முஸ்லிம்களுக்கு நடைமுறையில் உள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை குறைந்தது 5 சதவீதமாக உயர்த்தித் தரவேண்டும் என்று தமிழக அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
2. மத்திய அரசில் இடஒதுக்கீடு
மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கும் அனைத்து சிறுபான்மையினருக்குமான 4.5 சதவீத இடஒதுக்கீடு என்பது ஒரு மோசடி என இப்பொதுக்குழு குற்றம்சாட்டுகிறது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரையின்படி மொத்த சிறுபான்மையினருக்கும் 15 சதவீத இடஒதுக்கீடும், அதில் முஸ்லிம்களுக்கு மட்டும் 10 சதவீத உள் ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என்றும், இதற்காக அரசியல் சாசன சட்டத்தின் 9வது அட்டவணையில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது.
3. கூடங்குளம் அணுஉலை விவகாரம்
கூடங்குளம் அணுஉலை உற்பத்திக்கு எதிராக நான்கு மாத காலமாக அப்பகுதி மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகிறார்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, நமது எதிர்காலத் தலைமுறைகளின் பாதுகாப்பையும், சுற்றுச்சூழலையும் காத்திடும் வகையில் கூடங்குளம் அணுஉலை செயல்பாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
மேற்கு வங்கத்தில் அணுஉலைகளை அனுமதிக்க மாட்டோம் என அம்மாநில அரசு அறிவித்திருப்பது போல், இவ்விஷயத்தில் தமிழக அரசும் உறுதியான நிலைபாட்டைப் பின்பற்ற வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
4. முல்லைப் பெரியாறு விவகாரம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் செயல்பாடுகள், மனிதாபிமானத்திற்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் சவால்விடும் வகையில் இருப்பதாக இப்பொதுக்குழு குற்றம்சாட்டுகிறது.
இவ்விஷயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பொதுநல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று தமிழகத்தின் உரிமையை மீட்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
5. மீனவர்கள் பாதுகாப்பு
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். இதுவரை 400க்கும் மேற்பட்ட மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அவர்களது உடைமைகள் அழிக்கப்பட்டுள்ளன. இவ்விஷயத்தில் இந்திய அரசு போதிய அக்கரையின்றி செயல்படுகிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான கடற்பகுதியில் இந்தியக் கடற்படையை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
6. தீவிரவாத பீதி
இந்தியாவெங்கும் நடைபெறும் குண்டுவெடிப்புகளுக்குப் பின்னால் காவி பயங்கரவாத சக்திகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்குப் பின்னணியாக செயல்படும் முதன்மை சக்திகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள அனைத்து குண்டுவெடிப்புகளுக்குப் பின்னாலும் உள்ள இவர்களது தொடர்புகள் முழுமையாக கண்டறியப்பட வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
7. அப்பாவிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்
இந்தியா முழுக்க பல்வேறு தீவிரவாதப் பின்னணியின் தொடர்பாக சந்தேகிக்கப்பட்டு, விசாரணைக் கைதிகளாக வாடும் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நஷ்டஈடு வழங்கவும் ஆவண செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
8. மதக்கலவர தடுப்புச் சட்டம்
நாடெங்கிலும் உள்ள சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கும் நோக்குடன் மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்த "மதக்கலவர தடுப்புச் சட்டத்தை' எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்படாமல் அமலுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு ஜனநாயகத்தின் மீதும், மதச்சார்பின்மையின் மீதும் அக்கறை உள்ள அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
9. பரமக்குடி சம்பவம்
பரமக்குடியில் கடந்த செப்.11, 2011 அன்று காவல்துறையில் ஆறு தலித்துகள் சுட்டுக் கொல்லப்பட்டதை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது. கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி கட்டுப்படுத்த வேண்டிய ஒரு நிகழ்வை, போர்க்களமாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு இலாக்காப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
10. கட்டண உயர்வு
தமிழக அரசு பேருந்துக் கட்டண உயர்வு அதிரடியாக உயர்த்தியது பொதுமக்களை கடுமையாக பாதித்துள்ளது. சாமான்ய மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் அன்றாடம் பாதிக்கப்படுவதால், பேருந்து கட்டண உயர்வைக் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
11. ஆயுள் தண்டனைக் கைதிகள் விடுதலை
பல்வேறு வழக்குகளில் ஆயுள் தண்டனைப் பெற்ற கைதிகளின் விடுதலை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், 14 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகளை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
12. வெளிநாட்டு வாழ் தமிழர் நலன்
வளைகுடா நாடுகளில் உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நலனைக் காக்கும் விதத்தில் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சகத்தை தமிழக அரசு உருவாக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
மேலும், வெளிநாடுகளில் பணியாற்றிவிட்டு தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட ஆவண செய்யப்படும் என சமீபத்தில் நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியிருப்பதை இப்பொதுக்குழு மனமார வரவேற்கிறது.
13. அரபு வசந்தத்திற்கு வரவேற்பு
மத்திய கிழக்கு - அரபு நாடுகளில் சர்வாதிகாரத்திற்கு எதிராக ஜனநாயகம் வேண்டி பொதுமக்கள் நடத்திவரும் கிளர்ச்சிகளுக்கு இப்பொதுக்குழு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
எகிப்தில் அமைதி வழியில் தேர்தலை சந்தித்து, தங்களின் எண்ணங்களை சாதித்துக் கொண்ட எகிப்து மக்களை இப்பொதுக்குழு பாராட்டுகிறது. மேலும் சிரியா, ஜோர்டான், ஏமன் உள்ளிட்ட நாடுகளிலும் அமைதியும், ஜனநாயகமும் மலர அரபு லீக்கும், முஸ்லிம் நாடுகளின் கூட்டமைப்பும் முன்முயற்சிகளை எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் தலையிட வாய்ப்பளிக்க வேண்டாம் என்றும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
14. போர் வேண்டாம்
அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் தேர்தலைக் கணக்கில் கொண்டு, ஈரானின் மீது போர் தொடுக்க முயலும் அமெரிக்காவை இப்பொதுக்குழு எச்சரிக்கிறது. சட்டவிரோதமாக அணுகுண்டுகளை வைத்திருக்கும் இஸ்ரேலைப் பாதுகாக்கும் அமெரிக்காவுக்கு ஈரானை எச்சரிக்க எந்தத் தகுதியும் இல்லை. மேலும், சர்வதேச சமூகம் இந்த பாரபட்சப் போக்கைக் கண்டிக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
15. ஹஜ் விசாவை அதிகரிக்க வேண்டும்
இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செய்யும் புனிதப் பயணிகளின் எண்ணிக்கை வருடந்தோறும் உயர்ந்து வருகிறது. 20 கோடி இந்திய முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கேற்ப, சவூதி அரேபியாவிடம் கூடுதல் ஹஜ் விசாக்களைப் பெற மத்திய அரசு முயற்சி எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
16. உளவு அமைப்புகளுக்கு கண்டனம்
இந்தியாவிலிருந்து ஹஜ் பயணம் செய்யும் ஹாஜிகளுடன் உளவாளிகளை இந்திய அரசு அனுப்பி வைப்பதாக பல ஹாஜிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் உண்மையாக இருக்குமெனில், இப்பொதுக்குழு அதை வன்மையாக கண்டிக்கிறது. முஸ்லிம்களின் இறைநம்பிக்கையையும், தேசப்பற்றையும் உளவுபார்ப்பதை ஜீரணிக்க முடியாது. இவ்விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
17. பூரண மதுவிலக்கு
மக்களின் முன்னேற்றம், ஆரோக்கியம், குடும்ப வாழ்வு ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடி, பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.
18. தானே புயல் நிவாரணம்
கடந்த மாதம் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களையும், புதுச்சேரியையும் தாக்கிய தானே புயலில் உயிரிழந்த அனைவருக்கும் தமிழக அரசின் நிவாரண உதவிகள் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்ற குறைகளும், கவலைகளும் உள்ளது. இவ்விஷயத்தில் கூடுதல் கவனத்தை செலுத்துமாறு தமிழக அரசையும், மத்திய அரசையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
Last Updated ( Monday, 30 January 2012 17:08 ) 

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

தமுமுக-மமக வின் மாநில பொதுக்குழு


தமுமுக-மமக வின் மாநில பொதுக்குழு

E-mail Print PDF
Article Index
தமுமுக-மமக வின் மாநில பொதுக்குழு
புகைப்பட தொகுப்பு - 1
புகைப்பட தொகுப்பு - 2
புகைப்பட தொகுப்பு - 3
புகைப்பட தொகுப்பு - 4
All Pages
தமுமுக-மமக வின் மாநில செயற்குழு நேற்று நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று காலை தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் தொடங்கிய தமுமுக- மமக வின் பொதுக்குழு பேரா. டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்களின் அறிமுக உரையை தொடர்ந்து, தமுமுகவின் பொதுசெயலாளர், சகோ. செ. ஹைதர் அலி அவர்களின் உரையோடு நடைபெற்றது.

பொதுக்குழு புகைப்படங்கள்:









Last Updated ( Saturday, 28 January 2012 19:54 ) 

தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்


தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில்

E-mail Print PDF
இன்று நடைபெற்ற தமுமுக-மமக மாநில பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு......
தமுமுக மற்றும் மமக மாநில தலைவராக
மௌலவி JS. ரிபாயி
JS Rifaai

தமுமுக மாநில பொதுச்செயலாளராக
P. அப்துல் சமது
Abdul samad

தமுமுக மற்றும் மமக மாநில பொருளாளராக
O.U. ரஹ்மத்துல்லாஹ்
OU Rahmathullah

மமக மாநில பொதுச்செயலாளராக
M. தமிமுன் அன்சாரி



Thamimun Ansari

ஆகியோர் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விரிவான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும். இன்ஷா அல்லாஹ்.....
Last Updated ( Saturday, 28 January 2012 19:52 ) 

மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிபாயி போட்டியின்றி தேர்வு - தினத்தந்தி செய்தி


மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிபாயி போட்டியின்றி தேர்வு - தினத்தந்தி செய்தி

E-mail Print PDF
தாம்பரம், ஜன.29

மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவராக ஜே.எஸ்.ரிபாயி போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் முறையே தாம்பரம் மற்றும் மேடவாக்கத்தில் நடைபெற்றது. இதில் மாநில புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இது குறித்த த.மு.மு.க. மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தாம்பரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:


மாநில தலைவர் ஜே.எஸ்.ரிபாயி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிபாயி, பொருளாளராக ஒ.யு.ரஹ்மத்துல்லா, த.மு.மு.க. பொதுச் செயலாளராக பி.அப்துல்சமது, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக தமீமுன் அன்சாரி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் நிர்வாக குழு மூத்த தலைவர்களாக நானும், ஹைதர் அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்.

இடஒதுக்கீடு
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின் படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தானே புயலால் கடலூர், விழுப்புரம், நாகை மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஏற்பட்ட சேதத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றார்.

கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் அப்பகுதி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசுவது கண்டிக்கத்தக்கது. மேற்கு வங்காளத்தில் அணு உலைகளை அனுமதிக்கமாட்டோம் என அந்த மாநில அரசு அறிவித்து இருப்பது போல தமிழக அரசும் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.

ஆதரவு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மிகச் சிறப்பான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். தமிழக அரசு எடுத்துவரும் மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கு த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி என்றும் ஆதரவாக இருக்கும்.

தமிழக மீனவர்களை தாக்கும் இலங்கை கடற்படையினரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர மத்திய அரசை வலியுறுத்தி த.மு.மு.க. சார்பில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.எஸ்.ரிபாயிக்கு மூத்த தலைவர்கள் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.ஹைதர் அலி வாழ்த்து தெரிவித்தனர். முடிவில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் யாக்கூப் நன்றி தெரிவித்தார்.

நன்றி - தினத்தந்தி 29-01-2012 பககம் 8
Last Updated ( Sunday, 29 January 2012 10:17 ) 

தம்மாம் கிளைக் கழக தேர்தல் கூட்டம்


தம்மாம் கிளைக் கழக தேர்தல் கூட்டம்

E-mail Print PDF
கடந்த 27.1.2012 வெள்ளியன்று தம்மாம் கிளைக் கழக பொதுக்கூட்டம் தம்மாம் வெளிப்பட்டிணத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டம் தம்மாம் கிளை நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் கூட்டமாகவும் அமைந்தது.
கூட்டத்தை தம்மாம் கிளையின் தலைவர் பொறியாளர் இபுறாஹீம் ஷா துவக்கிவைத்து வரவேற்புரை ஆற்றினார். அதில் அவரது தலைமையில் கடந்த காலத்தில் தம்மாம் கிளை மேற்கொண்ட பல்வேறு பணிகளை குறிப்பிட்டுக் காட்டினார்.
அதனைத் தொடர்ந்து தம்மாம் கிளைப் பொருளாளர் சகோ. நெய்னா முஹம்மதுவின் மகன் மாஸ்டர் அன்ஸாரி தனது கனீர் குரலில் கழகப்பாடலான 'இது அண்ணல் நபி கூட்டம்' என்ற பாடலைப் பாட குழுமியிருந்தவர்கள் குதூகலமாயினர். பின்னர் மண்டல பொருளாளர் சகோ.நஸ்ருத்தீன் ஸாலிஹ் அவர்கள் தமுமுகவின் இலட்சிய பயணத்தின் சுவடுகளை சுட்டிக்காட்டி அவையோரை ஆச்சரியப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மண்டலச் செயலாளர் சகோ. இஸ்மாயீலின் எழுச்சி உரையாற்றினார். தனது உரையில் ரஸுல் ஸல் காலம் தொட்டு இன்று வரை முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய நடைமுறைகளையும், அதன் அடிச்சுவட்டில் தமுமுக செய்து வரும் சேவைகளையும் அத்தகைய நற்செயல்களில் நம்முடைய பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் குர்ஆன் ஹதீஸ் மேற்கோள்களுடன் அழகாக எடுத்துரைத்தார்.
அதன் பின் ஜும்ஆத் தொழுகை மற்றும் உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. மவ்லவி சித்தையன் கோட்டை செய்யது இபுறாஹீம் மன்பயீ அவர்களின் அருமையான உரை மற்றும் தொழுகையைத் தொடர்ந்து மதிய உணவு பரிமாறப்பட்டது.
பின்னர் துவங்கிய பிற்பகல் அமர்வின் ஆரம்பமாக மண்டலத் துணைத்தலைவர் சகோ. அப்துல் காதர் கிளை நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பையும், நடைமுறைகளையும் குறித்து விளக்கமளித்தார். அதனைத் தொடர்ந்து நடப்பு நிர்வாகிகள் தத்தமது பெறுப்புகளிலிருந்து விலகிக் கொண்டனர். இதனிடையே, தமிழகத்தில் தலைமை செயற்குழு கூட்டத்தின் விபரங்கள் பெறப்பட்டு சுடச்சுட அவை அவையோரிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
தலைமை செயற்குழு பரிந்துரை செய்துள்ள மமக பொதுச் செயலாளராக சகோ.தமீமுன் அன்ஸாரி அவர்கள் அலைபேசி வழியே அவையோரிடம் சுமார் அரைமணி நேரம் உரையாற்றினார்.
பின்னர் நடைபெற்ற கிளை நிர்வாகிகள் தேர்தலில் நிர்வாகிகள் (அவர்களின் விபரங்களை கீழே காண்க) ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் பொறியாளர் ஸக்கரிய்யா அவர்கள் பொறுப்புகளும் அமானிதமே எனும் தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சிறப்பான உரையாற்றினார்.
சகோ.பிலால் அவர்களின் நன்றியுரையுடன் அமர்வு இனிதே நிறைவடைந்தது. நூற்றுக்கும் சற்று அதிகமாக கலந்து கொண்ட உறுப்பினர்கள் புத்துணர்வுடன் பிரிந்து சென்றனர்.
சிறப்புச் செய்தியாளர்.

புதிய தம்மாம் கிளை நிர்வாகிகளின் விபரங்கள்:

கிளைத் தலைவர் : சகோ.அப்துர்ரஹ்மான் (கமுதி) - 0567554779
தமுமுக செயலாளர் : சகோ.அஜ்மல் கான் (மதுக்கூர்) - 0509419455
மமக செயலாளர்: சகோ.அபுல்கலாம் (பனைக்குளம்) - 0505264698
பொருளாளர்: சகோ.பிலால் (வந்தவாசி) - 0503898671

வெள்ளி, 27 ஜனவரி, 2012

62 வது குடியரசு தினத்தை முன்னிட்டு 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்


62 வது குடியரசு தினத்தை முன்னிட்டு 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்

E-mail Print PDF
62 வது குடியரசு தினத்தை முன்னிட்டு வட சென்னை சார்பாக 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் செ. ஹைதர் அலி, மாநில செயலாளர் P.S. ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


R.K. நகர தமுமுக சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்







இராயபுரம் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாம்





துறைமுகம் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை மற்றும் தைராய்டு முகாம்.





பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாம்






குளத்தூர் பகுதியில் நடைபெற்ற மகளிர் பொது மருத்துவ முகாம்.





திருவிக நகர் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்.




எழும்பூர் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்






வில்லிவாக்கம் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்






Last Updated ( Thursday, 26 January 2012 16:13 ) 

இன்று கூடியது மாநில செயற்குழு


இன்று கூடியது மாநில செயற்குழு

E-mail Print PDF
தமுமுக- மமக வின் மாநில நிர்வாகக்குழு இன்று காலை 10 மணிக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணி அளவில் தலைமை செயற்குழு தொடங்கியது. இந்த செயற்குழுவில் தமிழகம் முழுவதும் உள்ள தமுமுக - மமக மாவட்ட நிர்வாகிகளும், மாநில செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, நாளை மேடவாக்கத்தில் தமுமுக-மமக வின் மாநில பொதுக்குழு நடைபெற உள்ளது (இன்ஷா அல்லாஹ்).


செயற்குழு புகைப்பட காட்சிகள்
மாநில செயற்குழு



















Last Updated ( Friday, 27 January 2012 19:01 )