வெள்ளி, 21 டிசம்பர், 2012

மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம்


மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம்

மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம்

மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம் இன்று தென்சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. மமக தலைவர் ஜே.எஸ்.ரிபாயி துவக்கி வைத்து உரையாற்றினார்., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு வாழ்த்துரை வழங்கினார். மமக தொண்டர்கள் நூற்றுக்கணக்கில் கொடி பிடித்து பேரணியாக சென்றபொழுது சுமார் 5 இடங்களில் பரப்புரை நிகழ்த்தப்பட்டது. இப்பரப்புரையின்போது மமக இணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது, மாநில அமைப்பு செயலாளர் ஈரோடு பாரூக், தமுமுக மாநில செயலாளர் நாவலூர் மீரான், முன்னாள் மாநில துணை செயலாளர் PLM யாசீன், தலைமை கழக பேச்சாளர் தைமிய்யா, தென் சென்னை மாவட்ட தலைவர் சீனி முஹம்மது ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதேபோல வடசென்னை வில்லிவாக்கத்தில் மாலை 5 மணிக்கு துவக்கி மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி பரப்புரையை துவக்கி வைத்தார். தமிழ் தேசிய தலைவர் ஐயா பழ. நெடுமாறன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். வட சென்னை மாவட்ட தலைவர் உஸ்மான், தமுமுக மாநில செயலாளர் நாவலூர் மீரான், மமக அமைப்பு செயலாளர் ஈரோடு பாரூக் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள். ...

மது - மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை முழக்கங்கள்

தமிழக அரசே தமிழக அரசே உடனே மூடு உடனே மூடு டாஸ்மாக் கடைகளை உடனே மூடு
தமிழக அரசே தமிழக அரசே விற்காதே விற்காதே சாராயத்தை விற்காதே கெடுக்காதே கெடுக்காதே தமிழக மக்களைக் கெடுக்காதே
சமூக நீதி தாயகத்தில் சாராய விற்பனை...
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நாளை பரப்புரை தொடக்கம்

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் நாளை பரப்புரை தொடக்கம்

மமக வின் சார்பில் மது-மதுக்கடைகளுக்கு எதிரான பரப்புரை யுத்தம் நாளை தொடங்குகிறது.
சென்னையில் மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் பரப்புரையை தொடங்கி வைக்கிறார்கள். இணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீது ...

மதுவுக்கு எதிராக ஒரு கோடி மக்களிடம் பரப்புரை: மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு

மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி, மது-மதுக் கடைகளுக்கு எதிரான தொடர் பரப்...
பல கட்சிகளிலிருந்து மமக வில் இணைந்தனர்

பல கட்சிகளிலிருந்து மமக வில் இணைந்தனர்

திமுக உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளிலிருந்து தலைவர் ஜே.எஸ்.ரிபாயி முன்னிலையில் பலர் மமக வில் இணைந்தனர். மமக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார்.
சென்னை சாந்தோமில் ஒற்றுமையை நோக்கி...

சென்னை சாந்தோமில் ஒற்றுமையை நோக்கி...

தமிழகம் முழுவதும் தமுமுக, ஒற்றுமையை நோக்கி என்ற உலமாக்கள் ஜமாத் நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. கடந்த 16-12-2012 அன்று தென் சென்னை மாவட்டம் மயிலை தொகுதி சார்பாக ஒற்றுமையை ந... 

புதன், 12 டிசம்பர், 2012

பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு சிறந்த மாணவருக்கான விருது


Wednesday, 12 December 2012 18:58 administrator

E-mail Print PDF
புதுக்கல்லூரியின் சிறந்த மாணவருக்கான விருது டாக்டர். பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்டது. தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் அவர்கள் வழங்கினார்.