கர்ப்பிணி சாவு! டாக்டர் படுகொலை! யார் பொறுப்பு??
கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையினால் நிகழ்ந்த
மரணத்திற்குக் காரணம் அறுவை சிகிச்சை செய்த பெண் மருத்துவரின் அலட்சியம் மற்றும்
பணத்தாசையே காரணம் என கொந்தளித்த கர்ப்பிணிப் பெண்ணின் கணவன் அந்தப் பெண்
மருத்துவரைப் படுகொலை செய்ததைத் தொடர்ந்து தமிழகமே இருகூறாகப் பிரிந்தது. கொலை
செய்யப்பட்ட மருத்துவருக்கு ஆதரவாக ஒரு சாராரும், அவரைக் கொலை செய்த ஆட்டோ
ஓட்டுநருக்காக ஒரு சாராரும் பரிந்துபேசத் தொடங்கினர். பணத்தாசைப் பிடித்து அவசர
சிகிச்சையை தாமதப்படுத்திய மருத்துவரின் செயல் மன்னிக்க முடியாதது என்றாலும்
அதற்காகக் கொலை செய்த அந்த இளைஞனின் செயல் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அந்த மருத்துவரை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனையைப் பெற்றுக் கொடுத்து ஏராள
நிதிகளை இழப்பீடாக செலுத்த வைத்திருக்க வேண்டும். இவ்விஷயத்தில் மருத்துவர்களின்
வேலை நிறுத்தம் தேவையற்றது. மக்களின் உயிர்காக்கும் சிறந்த தொழிலை செய்யும் இவர்கள்
வேலை நிறுத்தம் செய்தது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
வேலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காலையில் கையெழுத்துப்போட்டுவிட்டு காலை 10 மணிக்கே தினமும் சென்னைக்குச் சென்று கொண்டிருந்த நான்கு மருத்துவர்களை காட்பாடி ரயில்வே நிலையத்தில் பொதுமக்கள் அடித்து உதைத்து ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தும் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது மட்டுமின்றி மணப்பாறையில் தன் மகனைக் கொண்டு அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு தண்டனை வழங்கப்பட்டதா? தெரியவில்லை. சேலத்தில் கர்ப்பிணியின் மரணம் தொடர்பாக நடைபெற்ற பொதுமக்களின் போராட்டத்தின் முடிவில் மருத்துவர்கள் குழுவின் விசாரணையில் மருத்துவர் விடுவிக்கப்பட்டார்.
அரசு & வணிகமய மாயையை விடுத்து மக்கள்நல அரசாக மாறினால் மட்டுமே இதுபோன்றஅவலங்களைத் தடுக்க முடியும்.

டாக்டர் சேது லட்சுமியைப் படுகொலை செய்த உணர்ச்சி வசப்பட்ட இளைஞன் அந்தக் கொடூரத்தை செய்யத் தூண்டிய காரணம் மனைவியின் மீதான பாசம் மட்டுமல்ல, அவனை நிதானம் இழக்கச் செய்த அவன் அருந்திய மதுவும் முக்கியக் காரணம். மதுவெனும் தீமை டாக்டர் சேதுலட்சுமி மீதான கொலைவெறித் தாக்குதலை வேகப்படுத்தியது. இதற்கு ஊருக்கு ஊர், மூலைக்கு மூலை டாஸ்மாக் கடைகளைத் திறந்து வைத்திருக்கும். அரசாங்கப் புன்னியவான்களைத்தான் குற்றம்சாட்ட முடியும்.மருத்துவம், சிகிச்சை என்ற நிலையில் இருந்து பக்கா வியாபாரம் என்ற நிலைக்கு இட்டுச்சென்றது யார்? கடந்த பாஜக ஆட்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜ், அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையல்ல என்றார்.2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேசிய சுகாதார சட்ட முன்வடிவின் இன்றைய நிலை என்ன? அந்த சட்ட முன்வடிவின்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் சிகிச்சை அளிப்பது அரசின் கடமை என்பது உறுதி செய்யப்படும். அவ்வாறு தவறினால் மாவட்ட ஆட்சியர் கூட நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்படுவார். ஆனால் அந்த சட்டமுன்முடிவை நிறைவேற்றாமல் அனைத்து அரசியல் கட்சிகளும் கிடப்பில் போட்டு கூட்டுச் சாதனை படைத்துள்ளன.
பிரிட்டனில் ஒரு தனிநபரின் மருத்துவத்திற்காக அரசு 94 சதவீதம் செலவிடுகிறது. மீதியை மட்டுமே அந்நாட்டு குடிமகன் செலவிடுகிறார். அமெரிக்காவில் 56 சதவீதமும், டென்மார்க், நார்வே நாடுகளில் 90 சதவீதமும் தன் நாட்டு குடிமகனுக்காக செலவிடப்படுகிறது. ஆனால் இந்தியாவில் 83 சதவீதம் இந்நாட்டுக் குடிமகனே செய்ய வேண்டும். 17 சதவீதம் மட்டுமே நாடு செலவழிக்கிறது. மருத்துவ சிகிச்சை செய்தே ஓட்டாண்டிகள் ஆனவர்களில் இந்தியர்கள் மட்டுமே அதிகம் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.மருத்துவச் செலவை அரசு ஏற்றுக்கொண்டால் மட்டுமே இளம் கர்ப்பிணியின் சாவையும், டாக்டரின் படுகொலையையும் மூர்க்கத்தன இளைஞனின் சிறை வாசத்தையும் தவிர்க்க இயலும். கோடிகளைக் கொட்டி நாடு முழுவதும் ஏராள தனியார் மருத்துவமனைகளை ஏற்படுத்த காரணமாக இருக்கும், அரசுகளுக்கு, பல பத்து லட்சங்களைக் கொடுத்துதான் மருத்துவப் படிப்புக்கு சீட் வாங்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்திய அரசுகள் ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி மருத்துவத் துறையை வணிகமாக்கிய அரசுகள்தான் தூத்துக்குடி கர்ப்பிணிப்பெண்ணின் சாவுக்கும், டாக்டர் சேதுலட்சுமியின் படுகொலைக்கும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
அரசு & வணிகமய மாயையை விடுத்து மக்கள்நல அரசாக மாறினால் மட்டுமே இதுபோன்றஅவலங்களைத் தடுக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக