செவ்வாய், 6 நவம்பர், 2012

திருச்சியில் நடைபெற்ற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம்


Saturday, 03 November 2012 14:51 administrator

E-mail Print PDF
திருச்சியில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாமில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மமக தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் மமக மூத்த தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது, மாநில செயலாளர்கள் கோவை செய்யது, சம்சுன் நாசர் உமரி, தருமபுரி சாதிக், மைதீன் உலவி, ராவுத்தர்ஷா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட நிர்வாகிகள் ஹக்கிம், இப்ராஹிம் ஷா, பைஜிஸ் அஹமது உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.இந்த ஒருநாள் பயிற்சி முகாமில் புத்துணர்வு பெற்றவர்களாக தங்கள் பணியை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டுமென்ற நோக்குடன் புறப்பட்டு சென்றனர்.

Last Updated ( Saturday, 03 November 2012 23:42 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக