வெள்ளி, 30 மார்ச், 2012

உயர்ந்தது மின்கட்டணம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்


உயர்ந்தது மின்கட்டணம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

உயர்ந்தது மின்கட்டணம் : அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் மின்கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்கிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மின்கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக மின்சார வாரியம் தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்தது. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பொது மக்களிடம் கருத்து கேட்டது.
இந்நிலையில் மின்சார கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அறிவிப்பு முறையாக அறிவிக்கப்பட்டது.
இஸ்லாமிய ஆட்சி வேண்டும்! துனிசியாவில் போராட்டம்

இஸ்லாமிய ஆட்சி வேண்டும்! துனிசியாவில் போராட்டம்

சர்வாதிகார ஆட்சியை அகற்ற புரட்சிவென்ற துனிசிய மக்கள், இஸ்லாமிய ஷரிஅத் முறையிலான ஆட்சி வேண்டும் என போராட்டத்தைத் துவக்கியுள்ளனர். பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பான இஸ்லாமிய முன்னணி இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
‘இஸ்லாம் எங்களின் மார்க்கம்; குர்ஆன் எங்கள் வழிகாட்டி’ என பொறிக்கப்பட்டிருந்த பதாகைகளை போராட்டக்காரர்கள் உயர்த்திப் பிடித்தபடி முழக்கங்களை எழுப்பினர். இஸ்லாமிய ஷரிஅத் அடிப்படையில் அமையாத எந்த சட்டத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

உத்திரப்பிரதேசம்: முஸ்லிம் கூட்டணி எட்டு தொகுதிகளில் வெற்றி

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பீஸ் பார்ட்டி கூட்டணி அமைத்து 203 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டனர். இதில் பீஸ் பார்ட்டி நான்கு சட்டமன்றத் தொகு...
திசை மாறும் ஊடகங்கள்! - மார்க்கண்டேய கட்ஜு

திசை மாறும் ஊடகங்கள்! - மார்க்கண்டேய கட்ஜு

ஊடகங்கள் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே கவரேஜ் செய்கின்றன. நாட்டின் எரியும் பிரச்சனைகளை மக்களிடையே கொண்டு செல்லும் பொறுப்பினை தட்டிக் கழித்துவிட்டு வி...

கல்பாக்கம் அணு உலையும், காயசண்டிகை எரிமலையும்...

கல்பாக்கம் அணுமின் நிலையத்திலிருந்து கடலில் சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உறங்கும் எரிமலை 258 ஆண்டுக்குப் பின்னர் தற்போது விழிக்கத் துவங்கியுள்ளது. ...

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும். - சட்டப்பேரவையில் இராமநாதபுரம் MLA ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை

முனைவர் பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே தமிழக மக்களுடைய உள்ளத்திலே மின் நெருக்கடியைப் போக்குவதற்கு இந்த அரசு என்ன செய்ய ப...

திருப்புல்லாணி ஒன்றியம் கிராமங்களுக்கு குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பேரவையில் இராமநாதபுரம் MLA ஜவாஹிருல்லாஹ் கோரிக்கை

இராமநாதபுரம் தொகுதி MLA, ஜவாஹிருல்லாஹ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே இராமநாதபுரம் தொகுதியில் திருப்புல்லாணி ஒன்றியம் சேதுகரை ஊராட்சிக்குப்பட்ட மேல...
 

தென்சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதி அடையாறு கிளை சார்பாக தண்ணீர் பந்தல்

தென்சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதி அடையாறு கிளை சார்பாக தண்ணீர் பந்தல் தென்சென்னை மாவட்டம் வேளச்சேரி பகுதி அடையாறு கிளை சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் இஸ்மாயில், பகுதி பொருளாளர் ஷேக் முபாரக், கிளை தலைவர் முஹம்மது அலி, கிளை பொருளாளர் மீரான் அமானுல்...

தென்சென்னை மாவட்டம் - சிவலிங்கபுரம், எம்ஜிஆர் நகர், சாதிக் பாட்சா நகர், கோயம்பேடு, வட பழனி பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு

தென்சென்னை மாவட்டம் - சிவலிங்கபுரம், எம்ஜிஆர் நகர், சாதிக் பாட்சா நகர், கோயம்பேடு, வட பழனி பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறப்பு 1) தென்சென்னை மாவட்டம் விருகம்பாக்கம் பகுதி சிவலிங்கபுரம் கிளை சார்பாக 26.03.12. திங்கட்கிழமை அன்று தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் இஸ்மாயில், தமுமுக செயலாளர் கோரி, துணைத் தலைவர்...
More:

தென்சென்னை மாவட்டம் தி.நகர் பகுதி பாண்டி பஜார் கிளை சார்பாக மருத்துவ உதவி

தென்சென்னை மாவட்டம் தி.நகர் பகுதி பாண்டி பஜார் கிளை சார்பாக மருத்துவ உதவி விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சியை சேர்ந்த ஜாஹிதா பேகம் என்பவரின் 6 வயது மகன் வசிமின் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அவனுடைய வயிறு பெரியதாகி கடுமையான வேதனையை அனுபவித்து வருகிறான். இவனுடைய அறு...

ரியாத் மத்திய மண்டல தமுமுக - மமக வின் சேவைகள்

கடந்த 20 அண்டுகளுக்கு முன் சவூதி அரேபியாவிற்கு வீட்டு வேலைக்கு பணிப்பெண்ணாக வந்திருந்த தஞ்சை மாவட்டதைச் சேர்ந்த மும்தாஜ் என்ற சகோதரி தனது ஸ்பான்சரினால் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு 20 ஆண்டுகளாக த...
More:

எகிப்தில் புதிய அரசியல் சட்டம்

சர்வாதிகார ஹோஸ்னி முபாரக்கை விரட்டி புரட்சி வென்ற எகிப்து நாட்டில் புதிய அரசியல் சாசனச் சட்டம் தயாரிக்க 100பேர்களைக் கொண்ட குழுவைத் தேர்வு செய்யும் பணிக்காக எகிப்து நாடாளுமன்றம் முக்கியத்துவம் வாய்ந்த...

கூடங்குளம் அணு உலை மின்வெட்டு பிரச்சினையைத் தீர்க்காது! முன்னாள் கடற்படைத் தளபதி கூறுகிறார்

கூடங்குளம் அணு உலை செயல்படத் தொடங்கினாலும் கூட மின்வெட்டு பிரச்சினையை அது தீர்க்காது என இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் எல். ராமதாஸ் தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய ஜப்பானின் சுனாமி மற...
More:

நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ மற்றும் புதிய புகைப்படங்கள்)

நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ மற்றும் புதிய புகைப்படங்கள்) நீடூர் - நெய்வாசலில் தமுமுக வின் 98 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமுமுக வினர் தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தி வருகின்றனர். அந்த வ...

உத்திரப் பிரதேசமும் தேர்தல் ஆணையமும் (Video)

உத்திரப் பிரதேசமும் தேர்தல் ஆணையமும்

புதிய தொலைக்காட்சியில் தமுமுக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் கலந்து கொண்ட நிகழ்ச்சி.
 

More:

மோடியை முன்நிறுத்தும் ஏகாதிபத்திய சக்திகள்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ராகுல் காந்திக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சவாலாக விளங்குவார் என மேற்கத்திய பத்திரிக்கையான டைம் தனது கணிப்பினை திணித்துள்ளது.
இந்த செய்தி தொடர்பான தகவல்கள...

பிரதமருடன் முஸ்லிம் எம்.பி.க்கள் சந்திப்பு - மூத்த பத்திரிக்கையாளரை விடுதலை செய்ய கோரிக்கை

மூத்த பத்திரிக்கையாளர் செய்யது முஹம்மது காஸிமி டெல்லி காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு வருகிறார். காஸிமியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் நீதிபதியிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, காஸிமிக்க...
More:

திங்கள், 26 மார்ச், 2012

நெல்லையில் இருந்து இடிந்தகரைக்கு தடையை மீறி பேரணி முயற்சி - 665 பேர் கைது


கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம்: போராட்டத்தைக் கைவிட மனிதநேய மக்கள் கட்சி வேண்டுகோள்

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் பத்திரிகை அறிக்கை:
கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இந்த தலைமுறையினருக்காகவும், அடுத்த தலைமுறையினருக்காவும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் சுப.உதயகுமாரன் மற்றும் அவரது குழுவினர் தங்களது இந்தப் போராட்டத்தைக் கைவிட்டுவிட்டு, உடல்நிலையை வருத்திக் கொள்ளாத போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
திருச்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் இரத்த தான சேவை

திருச்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் இரத்த தான சேவை

இலவச கண் பரிசோதனை முகாம்
திருச்சியில், த.மு.மு.க மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம்

கூடங்குளம் விவகாரம் - தமிழக அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தலைமை நிர்வாகக்குழு வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி வெளியிடும் அறிக்கை:
 
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ர...
இராமநாதபுரம் மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ரயில்வே துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக ரயில்வே துறையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்ட மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக தொடர்ந்து இராமநாதபுரத்தை புறக்கணித்து வரும் ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து கீழ்வரும் கோரிக்கைகளை ...

நெல்லையில் இருந்து இடிந்தகரைக்கு தடையை மீறி பேரணி முயற்சி - 665 பேர் கைது

திருநெல்வேலி: நெல்லையில் இருந்து இடிந்தகரை நோக்கி பேரணி செல்ல முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மனிதநேய மக...

இந்தியாவின் கருப்பு பட்டியலில் இஸ்ரேலிய நிறுவனம்

இந்தியாவும் இஸ்ரேலும் ராணுவ ரீதியிலும், அரசியல் தொடர்புகளிலும் அதீத நெருக்கம் காட்டி கொஞ்சி குலாவிவரும் நிலையில் இஸ்ரேலின் ராணுவத் தளவாட தொழிற்சாலை இந...

சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் வீழ்ந்தது; பாஜக மூழ்கிப் போனது

கடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளைப் பொறுத்தவரை, வர்த்தக நோக்கு ஊடகங்கள் பொதுமையான அளவு நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை என்பது ஆதா...
 

மின்வெட்டை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் தமுமுக - மமக சார்பில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம்

மின்வெட்டை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் தமுமுக - மமக சார்பில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் 12மணி நேர மின்வெட்டை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் தமுமுக மற்றும் மமக சார்பில் 21.3.2012 புதன் கிழமை அன்று முழு கடையடைப்பு மற்றும் மாலை 3மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சனி, 24 மார்ச், 2012

தண்ணீரினால் தான் உலகப் போர் ஏற்படும்


பொது
சனிக்கிழமை, 24 மார்ச் 2012 10:40





தண்ணீரினால் தான் எதிர்காலத்தில் உலக நாடுகளிடையே போர் ஏற்படும் என அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் பரிந்துறையின் பேரில் அமெரிக்க புலனாய்வுத்துறை ஆராய்ச்சி மேற்கொண்டது.
ஆய்வின் முடிவு குறித்து புலனாய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ஆசியாவில் ஓடும் பிரம்மபுத்திரா நதி, மத்திய கிழக்கு நாடுகளில் ஓடும் டைக்ரஸ் மற்றும் யுபரேட்டஸ் நதிகளை பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
ஏனெனில் அணைகள், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் இருப்பதால், போதுமான பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.
பல்வேறு நாடுகளில் ஓடும் நதியின் நீரிணை பங்கிடுவதில் நாடுகளுக்குள் பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இது அடுத்த உலகப் போர் ஏற்பட வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


makkalmanasu  thanks

நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ)


நீடூர் நெய்வாசலில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா: பேரா. ஜவாஹிருல்லா சிறப்புரை (வீடியோ)

E-mail Print PDF
நீடூர் - நெய்வாசலில் தமுமுக வின் 98 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது. தமுமுக வினர் தமிழகம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று நீடுரின் வரிசை எண். 98. இந்த ஆம்புலன்சை அர்ப்பணிப்பதற்காக மாபெரும் எழுச்சியுடன் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமுமுக வின் மூத்த தலைவர் ஜவஹிருல்லாஹ் .M.L.A.அவர்களும் , ம ம க வின் மாநில பொதுசெயலாளர் தமிமுன் அன்சாரி அவர்களும், தமுமுகவின் தலைமைக்கழக பேச்சாளர் சகோ. கோவை ஜாகிர், மாயவரம் அமீன், கடலூர் ஜின்னா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.
மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மயிலாடுதுறை M.L.A., திரு. பால அருள்செல்வன், மயிலாடுதுறை ஒன்றிய சேர்மன் அதிமுக சந்தோஷ்குமார் அவர்கள் கலந்துகொண்டார். இவ்விழாவிற்காக தமுமுக வினர் நீடுரை நோக்கி திரண்டனர். இவ்விழாவில் ஆயிரத்திருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





இந்தியாவின் கருப்பு பட்டியலில் இஸ்ரேலிய நிறுவனம்


இந்தியாவின் கருப்பு பட்டியலில் இஸ்ரேலிய நிறுவனம்

இந்தியாவும் இஸ்ரேலும் ராணுவ ரீதியிலும், அரசியல் தொடர்புகளிலும் அதீத நெருக்கம் காட்டி கொஞ்சி குலாவிவரும் நிலையில் இஸ்ரேலின் ராணுவத் தளவாட தொழிற்சாலை இந்திய அரசின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் வீழ்ந்தது; பாஜக மூழ்கிப் போனது

கடந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளைப் பொறுத்தவரை, வர்த்தக நோக்கு ஊடகங்கள் பொதுமையான அளவு நடுநிலையுடன் நடந்துகொள்ளவில்லை என்பது ஆதாரப்பூர்வமாக வெளிப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளில் காங்கிரஸின் தோல்வி குறித்து கருத்து வெளியிடும் ஊடகங்கள் காங்கிரஸையும், பாஜகவையும் ஒரே தட்டில் வைத்தோ அல்லது காங்கிரஸை பாஜகவை விட கீழிறக்கியோ கொச்சைப்படுத்துவதைத் தொடர்கிறார்கள்.
ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மமக அலுவலகம் வருகை

ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மமக அலுவலகம் வருகை

தமிழகத்தின் 9 மாவட்டங்களிலிருந்து 50லிருந்து 60 ஊராட்சி தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளோடு இணைந்து கோரிக்கை மனுவை 23.03.2012 அன்று மனிதந...
உத்தரப்பிரதேசம்: சாதனைப் படைத்தது பீஸ் பார்ட்டி

உத்தரப்பிரதேசம்: சாதனைப் படைத்தது பீஸ் பார்ட்டி

முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கென ஒரு கட்சி தேவை என்பதற்காக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான் பீஸ் பார்ட்டி. இந்தக் கட்சியின் தலைவரா...

கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறக்கும் முடிவு: தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

கூடங்குளம் அணு மின்நிலையத்தை திறக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறினார்.

கூடுதல் ரயில்களை இயக்க வலியுறுத்தி மார்ச் 24 இல் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரை - ராமேசுவரத்திற்கு கூடுதலாக ரயில்களை இயக்குவதுடன், கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட ரயில்வே துறை தொடர்பான கோரிக்கைகளை வலியு...
அணு உலை எதிர்ப்பு கூட்டணி சார்பாக ஊடகவியளாளர்கள் சந்திப்பு

அணு உலை எதிர்ப்பு கூட்டணி சார்பாக ஊடகவியளாளர்கள் சந்திப்பு

பத்திரிக்கையாளர் மன்றத்தில் 20.03.2012 அன்று காலை 10மணிக்கு அணு உலை எதிர்ப்பு கூட்டணி சார்பாக டி.எஸ்.எஸ். மணி தலைமையில் ஊடகவியளாளர்கள் சந்திப்பு நடைபெ... 

செவ்வாய், 20 மார்ச், 2012

நெல்லை கிழக்கு மாவட்டம் பேட்டையில் தமுமுக பொதுக்கூட்டம்


நெல்லை கிழக்கு மாவட்டம் பேட்டையில் தமுமுக பொதுக்கூட்டம்

E-mail Print PDF
நெல்லை கிழக்கு மாவட்டம் பேட்டையில் தமுமுக பொதுக்கூட்டம் 10 .3 .2012 அன்று நடைபெற்றது. மாநில செயலாளர் கோவை செய்யது உரையாற்றினர்.
பேட்டை நகர தலைவர் சேவத்த தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் பாளை பாரூக், மாவட்ட செயலாளர்கள் கே.எஸ். ரசூல் மைதீன், கே.எஸ்.காசீம் பிர்தௌசி, பொருளாளர் சர்தார் அலி கான், மாவட்ட துணை செயலாளர் பேட்டை செய்யது ஆகியோர் உரையாற்றினர். இதில் நூற்றுக்கணக்கான மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.