புதன், 22 பிப்ரவரி, 2012

அல்-கோபர் தமுமுக நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்


அல்-கோபர் தமுமுக நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

E-mail Print PDF
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கிய நாள் முதல் மக்கள் பணியான கல்வி உதவி, மருத்துவ உதவி மற்றும் அவசர கால உதவிகளில் அதிக கவனம் செலுத்தி வருவது தாங்கள் அறிந்ததே குறிப்பாக உயிர் காக்கும் உதவிகளான இரத்ததானம், மற்றும் ஆம்புலன்ஸ் சர்வீசில் தமுமுகவிற்கு நிகர் தமுமுக தான் என்றால் அது மிகையாகாது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2010 ஹஜ் மாதத்தில் ஹாஜிகளுக்கு அவரசகால உதவிக்காக சவூதி அரேபியா கிழக்கு மண்டலத்தில் அல்-கோபர் தமுமுக முதன் முறையாக கிங் ஃபகத் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாமை நடத்தியது. அல்-கோபர் தமுமுகவின் சிறப்பான முன்னேற்பாடுகளுடன் கூடிய இரத்ததானத்தை பாராட்டும் வண்ணம் அல்-கோபர் தமுமுகவிற்கு கிங் ஃபகத் மருத்துவமனை நினைவுக் கேடயத்தை வழங்கியது அனைவரும் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக கிங் ஃபகத் மருத்துவமனையின் வேண்டுகோளுக்கிணங்க 10-02-2012 அன்று அல்-கோபர் தமுமுக தன் மாபெரும் இரண்டாவது முறையாகஇரத்ததான முகாமை நடத்தியது.
இம்முகாம் மதியம் 1முதல் 5மணிவரை நடைபெற்றது. இம்முகாமில் தம்மாம், ஜூபையில், ரஹிமா, அப்கேக், அல்ஹஸா, சிகாத் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களின் பெயர்களை பதிவு செய்தபோதிலும் நேரமின்மையின் காரணமாக சுமார் 100 நபர்கள் மட்டமே தங்கள் குருதியைக் கொடையளித்தனர். ஆர்வமாக இரத்தம் கொடுக்கவந்து கொடுக்கமுடியாமல் சென்ற மக்களுக்காக இன்ஷாஅல்லா மூன்றாம் கட்ட இரத்ததான முகாம் வரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தாயகத்தில் தமுமுகவின் தன்னலமற்ற இரத்ததான சேவைகளைக் கண்ட மாற்று மத சகோதரர்கள் தாங்களாகவே முன்வந்து இரத்ததானம் செய்து அனைவரையும் அகமகிழச்செய்தனர்.
இம்முகாம் அல்-கோபர் தமுமுக கிளைத் தலைவர் சகோ.இஸ்மாயில் தலைமையிலும் துணைத் தலைவர் சகோ. ஷஃபி என்ற பாபு, செயலாளர் சகோ. ஹாஜா பஷிர், பொருளாளர். சகோ. ஷஃபியுல்லா, மக்கள் தொடர்பாளர் ஃபைசர், இணைச்செயலாளர் சகோ.இலியாஸ், துணைச்செயலாளர் சகோ.ஹாஜா ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் மண்டலத் துணைத்தலைவர் சகோ. அப்துல்காதர், மண்டலச் செயலாளர் சகோ. இஸ்மாயில், மண்டலப் பொருளாளர் சகோ.நஸ்ருதீன், துணைச் செயலாளர்கள் சகோ. அப்துல்காதர் ஜக்கரியா, சகோ.அஸ்ரப், சகோ.சீனிதுஹம்மது, இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



குறிப்பு: அல்கோபர் தமுமுக சமீபத்தில் மாபெரும் மருத்துவமுகாம் நடத்தியது குறிப்பிடத்தக்கது
Last Updated ( Wednesday, 22 February 2012 23:20 ) 

கோவையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம்






E-mail Print PDF
கோவையில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மின்வெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் த.மு.மு.க, முத்த தலைவர் செ.ஹைதர் அலி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் தமுமுக மாநில துணை பொதுச்செயலாளர் இ.உமர், கோவை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் சாதிக்அலி, தமுமுக மாவட்ட நிர்வாகிகள் பர்கத் அலி, ஹமிது, டி.எம்.எஸ். அப்பாஸ், ஷாஜகான், சுலைமான், நூர்த்தீன், அப்பாஸ். மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உட்பட் 500க்கு மேற்பட்றோர்கள் கலந்து கொண்டார்கள்.








 


















கூரியூரில் தமுமுக புதிய கிளை



E-mail Print PDF
இராமநாதபுரம் மாவட்டம் கூரியூரில் தமுமுகவின் புதிய கிளை 19.02.2012 அன்று தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது தமுமுக மூத்த தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அவர்கள் கிளைக் கொடியினை ஏற்றி வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த 200க்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பேசும்போது தொடர்ந்து சட்டசபையில் சிறுபான்மையினரின் இடஒதுக்கீட்டைப் பற்றி தனது கட்சி பேசிவருவதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் போது மமக மாநில அமைப்புச் செயலாளர் எஸ்.சலிமுல்லாகான் மற்றும் கூரியூர் கிளைத் தலைவர் அஹமது இபுராஹிம், மாவட்டத் தலைவர் சாதிக் பாட்சா, மமக மாவட்டச் செயலாளர் அன்வர் அலி, தமுமுக மாவட்டச் செயலாளர் தஸ்பிக் அலி மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Last Updated ( Wednesday, 22 February 2012 23:05 ) 

500 பள்ளிவாசல்களை மீண்டும் கட்டவேண்டும்! - மோடிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!



E-mail Print PDF
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற முஸ்லிம் இனப் படுகொலைகளை மோடியின் கும்பல்தான் முன்னின்று நடத்தியது என்பதற்கு மற்றுமொரு ஆதாரமாக பிப்.8, 2012 அன்று குஜராத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அமைந்துள்ளது. கலவரங்களை ஒடுக்க அக்கறையில்லாமல், வன்முறைப் பரவ வழிவகுத்து இருந்த மோடி அரசின் பாதகச் செயல்களை தலைமை நீதிபதி பாஸ்கர் பட்டாச்சார்யா மற்றும் நீதிபதி ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய இருக்கை மிகக்கடுமையாகக் கண்டனம் செய்துள்ளது.

குஜராத் கலவரங்களின் போது சங்பரிவார வெறியர்களால் இடிக்கப்பட்ட பள்ளிவாசல்களை அரசாங்கமே கட்டித்தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 2003ம் ஆண்டு ஐ.ஆர்.சி.ஜி. என்ற இஸ்லாமிய அமைப்பு குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. சேதமடைந்த பள்ளிவாசல்களுக்கு இழப்பீடு வழங்குவது மாநில அரசின் கொள்கையில் இல்லை என மோடி அரசு சார்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கலவரத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு இழப்பீடு வழங்கியது
போலவே, கலவரக் கும்பலால் இடிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களை மாநில அரசே நிதியுதவி செய்து கட்டித்தரவேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. மதக்கலவரங்களால்தான் மாநிலமெங்கும் முஸ்லிம்களின் ழிபாட்டுத்தலங்கள் பெருமளவில் இடிக்கப்பட்டன. எனவே இவற்றைக் கட்டித்தரும் கடமையிலிருந்து அரசாங்கம் விலகிவிட முடியாது என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மாவட்ட முதன்மை நீதிபதிகளும், தங்கள் மாவட்டத்தில் கலவரத்தால் இடிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் சீரமைப்பு குறித்து வரும் முறையீடுகளை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
பள்ளிவாசல் மறுநிர்மாணம் குறித்த வழக்குகளை கிடப்பில் போட்டு ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்காமல், கோரிக்கை மனு வந்த 6 மாத காலத்திற்குள் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.
குஜராத் கலவரத்தில் மூலமும், மூளையும் மோடியே...கலவரத்தைத் தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை... முஸ்லிம்களின் உயிர், உடைமை, மானம், வழிபாட்டுத்தலங்கள் இக்கலவரத்தில் குறிவைத்து சேதப்படுத்தப்பட்டன... என்ற உண்மைகளை குஜராத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் ரணப்பட்டுக் கிடந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு இத்தீர்ப்பு வயிற்றில் பாலை வார்த்துள்ளது
Last Updated ( Tuesday, 21 February 2012 21:31 ) 

கூத்தாநல்லூரில் மின்வாரிய அதிகாரிகளுடன் அமைதி கூட்டம்



E-mail Print PDF
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக நாளை 13.02.2012 நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மேற்படி அமைதி கூட்டத்தில் எடுக்கப்பட்ட கீழ்கண்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தீர்மானம்;
1. மின் இடை நிறுத்தம் செய்வது தமிழக அரசின் Go -அடிப்படையில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டு மின் நிறுத்தம் செய்யவேண்டும்.

2. பள்ளி மாணவ-மாணவிகளின் தேர்வை கருத்தில் கொண்டு மின் நிறுத்தும் நேரத்தை சீர்படுத்தவேண்டும்.
இதுபோன்ற பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு 5-நாட்கள் கால அவகாசத்திற்குள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் ஜனநாயக முறையில் எங்களது போராட்டம் தொடரும்....

இக்கூட்டத்தில் முஸ்லிம் லீக் - காங்கிரஸ் – C.P.M – D.M.K - தமிழக கட்டிட தொழிளாலர் சங்கம் மற்றும் பொதுமக்கள் சமுகநல ஆர்வலர்களும் கலந்துகடகொண்டனர்.


Last Updated ( Monday, 20 February 2012 15:39 ) 

குவைத்தில் தமுமுக திருவிழா


குவைத்தில் தமுமுக திருவிழா

E-mail Print PDF
குவைத்தில் தமுமுக 2005 இல் தொடங்கப்பட்டாலும் ஏதோ ஒரு சில தடங்கல்கள் ஏற்ப்பட்டு அதன் வளர்ச்சி பாதியில் நின்று விடுகிறது அதை போன்று நிர்வாகிகளும் தங்கள் செயல்பாடுகளை துரிதபடுத்தாமல் இருந்து விட்டனர். பேராசிரியர் தாஜ்தீன் அவர்களின் தலைமையின் கீழ் கடந்த ஆறு மாதத்திற்கு முன் நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டு பழைய உறுப்பினர்கள் அனைவரையும் சீர் செய்யப்பட்டும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டும் வருகிறது. முன்னப்பொழுதை விட தமுமுக குவைத்தில் வேகமாகவும் பரபரப்பாகவும், சுறுறுசுப்பாகவும் செயல்பட்டுவருகிறது.
கைதான் தமுமுக கிளை சார்பாக தாவாபணி:
இந்த சூழலில் தற்சமயம்17.02.2012 அன்று வெள்ளி கிழமை பேராசிரியர் தாஜ்தீன் அவர்களின் தலைமையின் கீழ வாப்ரா பகுதிக்கு கைதான் தமுமுக கிளை சார்பாக ஒரு குழு அழகான முறையில் சென்று தாவாபணி செய்தனர்.
மஹ்புலா தமுமுக ஒருங்கிணைப்புக் கூட்டம்:
சகோ,பெருங்களுர் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையின் கீழ் ஒரு குழு சென்று மஹ்புலா தமுமுக ஒருங்கிணைப்புக் கூட்டமும் நடந்தது.
மிஸ்ரிப் தமுமுகவின் கிளைக் கூட்டம்
மிஸ்ரிப் தமுமுக வின் கிளைக் கூட்டம் மிர்காப் சிட்டியில் வைத்து கிளைத்தலைவர் கமருதீன் தலைமையிலும் நடந்தது பின்பு குவைத் மண்டல தமுமுகவின் மாதாந்திர கூட்டமும் நடந்தது குவைத் மண்டல தமுமுக தலைவர் தேர்தல் குவைத் தமுமுகவின் மண்டலக்கூட்டம் பெருங்களுர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கிராத் ஓதி தொடக்கி வைத்தார். அல்ஹம்து[ ] சூரா வின் விளக்கம் குறித்து அற்புதமாக பேராசிரியர் தாஜ்தீன் அவர்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் வகுப்பெடுத்தார்.
இக் கூட்டத்தில் சகோ எஸ்.கே.சம்சுதீன் அலீம் அவர்கள் சங்கபரிவார் சூழ்ச்சி குறித்து விளக்கி முஸ்லிம்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என சிறப்புரையாற்றி குவைத்தில் தமுமுக வின் மண்டல தேர்தல் போட்டின்றி தேர்தல் நடக்க அனைவரும் முன் வர வேண்டும் என பேசினார். இதில் மண்டல தமுமுக தலைவர் மட்டும் தேர்வு செய்யப்பட்டது.
மண்டல தமுமுக தலைவராக சகோ, பேராசிரியர் தாஜ்தீன் அவர்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மற்ற பொறுப்புகள் தலைவர் அவர்கள் அறிவிப்பார் என்ன முடிவு செய்யப்பட்டது.
Last Updated ( Sunday, 19 February 2012 14:56 ) 

கிழக்கு மண்டல தமுமுக - கிங் ஃபஹத் மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் இரண்டாவது இரத்ததான முகாம்



E-mail Print PDF
கிழக்கு மண்டல தமுமுக விற்க்கு உட்ப்பட்ட அல்கோபார் தமுமுக கிளையும் கிங் ஃபஹத் மருத்துவமனையும் இனைந்து நடத்தும் மாபெரும் இரண்டாவது இரத்ததான முகாம்

இடம்: கிங் ஃபஹத் மருத்துவமனை அல்கோபார்
நாள்: இன்ஷாஅல்லாஹ் (10/02/2012) வெள்ளிக்கிழமை
நேரம்: 1 மணி முதல் 5 மணிவரை

TMMK_ALKOBER_BLOOD CAMP

இரத்த தானம் செய்வீர்... மனித உயிர் காப்பீர்...
கொஞ்சம் கொடுங்கள் பல நெஞ்சங்கள் அன்புடன் வாழ்த்தும்.

இரத்த தானத்தில் தனி முத்திரை

அன்புடன் அழைக்கின்றது

-தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
அல்-கோபர் சவூதி அரேபியா
Last Updated ( Thursday, 02 February 2012 11:28 ) 

வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

விழுப்புரம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம்


விழுப்புரம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம்

E-mail Print PDF
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 6 , 8 , 9 , 16 ஆகிய வார்டுகளில் உள்ள சாலைகள் மற்றும் சாக்கடை செப்பனிடுதல் தொடர்பாக விழுப்புரம் நகரம் 6 , 8 , 9 , 16 ஆகிய வார்டுகளில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் குண்டும், குழியுமாக, கழிவு நீர் சாலைகளில் ஓடும் சூழ்நிலை இருக்கிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கிடையே சென்று வருகின்றனர். இந்த வார்டுகளில் கொட்டப்படும் குப்பைகள் அல்லாமல் உள்ளதால், மேலும் அவ்வப்போது பெய்து வரும் மழையால் குப்பைகள் சாலையின் நடுவில் சேர்ந்தும், குழியாக உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கியும் இருப்பதால் பள்ளம் தெரியாமல் நடந்து செல்பவர்கள் கீழே விழுந்தும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளம் தெரியாமல் விழுந்தும் அடிபட்டு வருகின்றனர். கழிவுநீர் தேங்கி இருப்பதால் சுகாதாரக்கேடாகவும், கொசுக்கள் உற்பத்தியாகும் தொழிற்சாலையாகவும் இருப்பதால் இங்கு குடியிருப்பவர்கள் அடிக்கடி ஜுரம் மற்றும் நோயினால் அவதியுற்று வருகின்றனர். எனவே மேற்படி வார்டுகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் செய்து சாலையை சீரமைத்தும், வாய்க்கால்களை தூர்வாரி கொசு மருந்து அடித்தும், குப்பைகளை தினந்தோறும் அள்ளி செல்லவும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் நகராட்சியில், விழுப்புரம் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பில்02-02-2012 அன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம்



 

Add comment

வியாழன், 2 பிப்ரவரி, 2012

தலைமை அறிவிப்பு


தலைமை அறிவிப்பு

E-mail Print PDF
J.S. ரிபாயி அவர்கள் தொடர்பான நாகூர் வழக்கில் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனையை தீர்ப்பாக கொடுத்துள்ளது.
இது குறித்து தலைமை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. எனவே சகோதரர்கள் பதட்டப்படாமல் அமைதி காத்து, அவருக்காக துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Last Updated ( Thursday, 02 February 2012 13:23 ) 

1.2.2012 அன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேரா. ஜவாஹிருல்லா அவர்களின் கேள்வியும், அமைச்சரின் பதிலும்...



E-mail Print PDF
முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சென்ற ஆண்டு ஹஜ் பயணிகளுடைய எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மஹாராஷ்டிராவில், கேரளாவில் மற்றும் வேறு சில மாநிலங்களில் ஹஜ் செல்லும் பயணிகள் புறப்படுவதற்கு முன்பாக தங்குவதற்கு Haj House அரசாங்கத்தின் சார்பாக கட்டப்பட்டிருக்கிறது. சென்னையிலே தனியாருடைய இடத்தில்தான் தங்கவேண்டிய ஒரு நிலை இருக்கின்றது. இந்த ஆட்சியிலே, சென்னையிலே, அரசாங்கத்தின் சார்பாக Haj House கட்டுவதற்கு அரசு முன்வருமா என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.
மாண்புமிகு திரு. அ. முஹம்மத்ஜான்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தத் திட்டத்தை மாண்புமிகு அம்மா அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று நிச்சயமாக இது பரிசீலிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிழக்கு மண்டல தமுமுக - கிங் ஃபஹத் மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் இரண்டாவது இரத்ததான முகாம்



E-mail Print PDF
கிழக்கு மண்டல தமுமுக விற்க்கு உட்ப்பட்ட அல்கோபார் தமுமுக கிளையும் கிங் ஃபஹத் மருத்துவமனையும் இனைந்து நடத்தும் மாபெரும் இரண்டாவது இரத்ததான முகாம்

இடம்: கிங் ஃபஹத் மருத்துவமனை அல்கோபார்
நாள்: இன்ஷாஅல்லாஹ் (10/02/2012) வெள்ளிக்கிழமை
நேரம்: 1 மணி முதல் 5 மணிவரை

TMMK_ALKOBER_BLOOD CAMP

இரத்த தானம் செய்வீர்... மனித உயிர் காப்பீர்...
கொஞ்சம் கொடுங்கள் பல நெஞ்சங்கள் அன்புடன் வாழ்த்தும்.

இரத்த தானத்தில் தனி முத்திரை

அன்புடன் அழைக்கின்றது

-தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
அல்-கோபர் சவூதி அரேபியா
Last Updated ( Thursday, 02 February 2012 11:28 )