செவ்வாய், 6 நவம்பர், 2012

நெல்லை மேற்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் விபத்தில் மரணம்


நெல்லை மேற்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் விபத்தில் மரணம்

E-mail Print PDF
நெல்லை மாவட்டம் தாழையூத்தைச் சேர்ந்த நமது அருமைச் சகோதரர் ராஜா முஹம்மது அவர்கள் தமுமுகவின் ஆரம்பகாலத்திலிருந்து கிளை மற்றும் மாவட்டப் பொறுப்புகளில் செயலாற்றிவந்ததோடு, தமுமுகவின் பணிகளுக்காக அவ்வூரில் பல்வேறு கட்டங்களில் சுமார் 8க்கும் அதிகமான வழக்குகளை சந்தித்தவர். மாநிலம் தழுவிய அனைத்து போராட்டங்களிலும், எங்கு நடந்தாலும் கலந்து கொண்டவர்.
தன்னலம் பாராது பொது நலத்துடன் செயல்பட்ட அன்புச் சகோதரர் ராஜா முஹம்மது அவர்கள் கடந்த 02.11.2012 வெள்ளியிரவு நடந்த விபத்தில் மரணமடைந்தார், இன்னாலில்லாஹ்...
அவருக்கு ஆண், பெண் என இரு வாரிசுகள் உள்ளனர். மிகுந்த கஷ்டத்தில் தன் வாழ்க்கையை ஓட்டிய அவர், மரண தருவாயிலும் மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுநாள் 2.30 மணியளவில் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாவட்ட நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மமக மாநில அமைப்புச் செயலாளர்கள் மைதீன் உலவி, மண்டலம் ஜைனுல் ஆபிதீன் ஆகியோர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக