அமெரிக்காவின்
அடுத்த அதிபராக மீண்டும் ஒபாமா மீண்டும் பதவி ஏற்பாரா அல்லது முதன்முறையாக
மிட்ரோம்னி வெற்றி பெறுவாரா? கடந்த 6 மாத காலமாக உலகெங்கிலும் நடந்து வரும் இந்த
பட்டிமன்ற விவாதத்துக்கு விடையளிக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலின் இறுதி கட்ட
வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
அமெரின்ன
அதிபரை, அந்நாட்டின் 538 தேர்வு குழுவினர் (எலக்டோரல் காலேஜ்) தங்கள் ஓட்டுகளின்
மூலம் தேர்வு செய்கின்றனர். இதில் 270 ஓட்டுகளை பெறுபவர் தான் அதிபராக முடியும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஒபாமாவும்,
குடியரசு கட்சியின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தின் முன்னாள் முதல்வர் மிட்ரோம்னியும்
போட்டியிடுகின்றனர்.
மொத்தம்
உள்ள 84 மாகாணங்களில் இரண்டு கட்சிகளுமே சரிசமமான செல்வாக்குடன் இருப்பதாக முந்தைய
கருத்துக் கணிப்புகளின் மூலம் தெரிய வந்துள்ளது. சமீபத்தில், அமெரிக்காவை உலுக்கிய
சாண்டி புயல் பாதிப்புகளை ஒபாமா கையாண்ட விதம் அவருக்கு மேலும் ஆதரவை
கூட்டியுள்ளதாகவும், சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் கருத்துக் கணிப்புகள்
கூறுகின்றன.
ஏற்கனவே
34 மாகாணங்களில் 2.7 கோடி பேர் (33 சதவீதம்) வாக்களித்து விட்டனர். மீதமுள்ள 50
மாகாணங்களில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சாண்டி புயலால் பாதிக்கப்பட்ட
நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட 15 மாகாணங்களிலும் இன்று வாக்குப்பதிவு
நடைபெறுகிறது. நியூஜெர்சியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகள் புயலால்
சேதமடைந்த போதிலும், ராணுவ வாகனங்களில் தற்காலிக வாக்குச் சாவடிகள்
அமைக்கப்பட்டுள்ளன.
புயலால்
இடம் பெயர்ந்த மக்கள் இ.மெயில் மற்றும் பேக்ஸ் மூலம் வாக்களிக்க வசதி
செய்யப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் 132.65 மில்லியன்
வாக்களித்திருந்தனர். இந்த முறை நடைபெறும் தேர்தலில் 18 வயதான 219 மில்லியன் பேர்
வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். இவர்களில் 3.2 மில்லியன் கைதிகளுக்கு
வாக்குரிமை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த
தேர்தலில் 6 இந்தியர்களும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இன்றைய தேர்தல் மூலம்
அதிபரும், அமெரிக்க செனட் சபையின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களும்,
பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும், அந்தந்த
மாகாணத்தில் நடந்த - நடைபெறவுள்ள முக்கிய சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்தும்
வாக்குச் சீட்டின் மூலம் வாக்காளர்கள் தங்கள் கருத்துகளையும் இன்று பதிவு
செய்கின்றனர்.
News
: Source
eutamilar. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக