சனி, 24 மார்ச், 2012

தண்ணீரினால் தான் உலகப் போர் ஏற்படும்


பொது
சனிக்கிழமை, 24 மார்ச் 2012 10:40





தண்ணீரினால் தான் எதிர்காலத்தில் உலக நாடுகளிடையே போர் ஏற்படும் என அமெரிக்க புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் பரிந்துறையின் பேரில் அமெரிக்க புலனாய்வுத்துறை ஆராய்ச்சி மேற்கொண்டது.
ஆய்வின் முடிவு குறித்து புலனாய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்கு ஆசியாவில் ஓடும் பிரம்மபுத்திரா நதி, மத்திய கிழக்கு நாடுகளில் ஓடும் டைக்ரஸ் மற்றும் யுபரேட்டஸ் நதிகளை பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்.
ஏனெனில் அணைகள், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் இருப்பதால், போதுமான பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.
பல்வேறு நாடுகளில் ஓடும் நதியின் நீரிணை பங்கிடுவதில் நாடுகளுக்குள் பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இது அடுத்த உலகப் போர் ஏற்பட வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


makkalmanasu  thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக