செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

அபுதாபி மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கு தர்பியா நிகழ்ச்சி



E-mail Print PDF
அபுதாபி மண்டல தமுமுக நிர்வாகிகளுக்கு தர்பியா நிகழ்ச்சி கடந்த 03 - 08 - 2012 அன்று வெள்ளிக்கிழமை  ஜும்மாவிற்கு பிறகு நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. துணை செயலாளர் கீழை அஹ்மத் அவர்கள் கிராத் ஓதி தொடங்கி வைத்தார். சிதம்பரம் சுஜஜாவுதீன் அவர்கள் தலைமை தாங்கினார். செயலாளர் கீழை இர்பான் அவர்கள் "தர்பியாவின் நோக்கம்" என்ற தலைப்பில் துவக்க உரை நிகழ்த்தினார்.
அடுத்து திருச்சி அப்துல் ரஹ்மான் அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள தமுமுக மாநில செயலாளர் தருமபுரி சாதிக் பாஷா அவர்கள் "சுயபரிசோதனை" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்கள். இறுதியாக கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிர்வாகிகள் கருத்துரைக்கையில் இது போன்ற நிகழ்ச்சி மாதம் ஒரு முறை அவசியம் என்று கூறினார்கள். அபுதாபி நேஷனல் எளிவேட்டர் நிறுவனம் சார்பாக மிகவும் சிறப்பாக இப்தார் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
Last Updated ( Tuesday, 07 August 2012 17:20 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக