ஞாயிறு, 22 ஜூலை, 2012

பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து


பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பின்வரும் வாழ்த்துச் செய்தியை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரனாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ளார்:
இந்திய குடியரசுத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். மதசார்பின்மை கொள்கையில் பிடிமானம் கொண்ட நீங்கள் மிகப் பெரும் வாக்குகள் வித்தயாசத்தில் வெற்றிப் பெற்றது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது. குடியரசு தலைவர் பதவியின் உயர் மாண்புகளை நீங்கள் பேணுவதுடன் உங்கள் அனுபவம் மற்றும் ஆற்றல்களினால் அப்பதவிக்கு மேலும் மெருகூட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. குடியரசுத் தலைவர் என்ற முறையில் நீங்கள் நமது நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களின் குறிப்பாக பலவீனமான மக்களின் உரிமைகளை தகுந்த முறையில் பாதுகாப்பீர்கள் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு உள்ளது. உங்கள பதவிக் காலத்தில் நாடு பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
 
- எம்.எச்.ஜவாஹிருல்லா
ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு

ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவருமான பேரா.முனைவர். எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் தனது குவைத் மற்றும் சவூதி கிழக்கு மண்டல சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, ரியாத் மத்திய மண்டலத்திற்கு வருகைதந்து அங்கு நடந்த பல்வேறு நிகழ்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தம்மாமிலிருந்து ரயில் மூலம் ரியாத் வந்தடைந்த பேராசிரியர் அவர்கள், வட மாநிலத்தைச் சேர்ந்த சமுதாயப் பிரமுகர்கள் ஏற்பாடுசெய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இந்திய முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். ஹைதரபாத், பிகார், உபி, டில்லி மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த சமுதாயப் பிரமுகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்கள். மேலும் தமுமுகவின் 17 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க செயல்பாடுகளையும், அதன் அரசியல் பிரிவான மமகவின் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் தாமும், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சகோ.அஸ்லம் பாஷாவும் சட்டமன்றத்தில் எழுப்பிவரும் உரிமை குரலையும், தாங்கள் மேற்கொண்டு வரும் தொகுதி மேம்பாடுகளையும் பட்டியலிட்டு விரிவாக விளக்கினார்.

முஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் - த.மு.மு.க. மாநில தலைவர் பேச்சு - தினத்தந்தி செய்தி

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று த.மு.மு.க மாநில தலைவர் ரிபாயி கூறினார்.
த.மு.மு.க பொதுக்கூட்டம்
கல்வி, அரசியல், வேலைவாய்ப்பில் முஸ்லிம்கள...
மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் நன்றி

மனிதநேய மக்கள் கட்சிக்கு காங்கிரஸ் நன்றி

குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற செயலாளர் விஜயதரணி எம்.எல்.ஏ. அவர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் த...
முஸ்லிம் தொழிலாளரை உயிரோடு கொளுத்தியக் காவல்துறை!

முஸ்லிம் தொழிலாளரை உயிரோடு கொளுத்தியக் காவல்துறை!

ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையானது என்று பேசப்பட்ட தமிழகக் காவல்துறை, பின்னாளில் கற்பழிப்புக்குப் பேர்போனது என்ற புகழைப் பெற்றது. சிதம்பரம் பத்மினி கற்பழிப்பும், வாச்சாத்தியின் ஏழைப் பெண்கள...
குளச்சலில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

குளச்சலில் ஆம்புலன்ஸ் அர்பணிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கிளை தமுமுக சார்பாக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி 18/07/2012 அன்று நடைபெற்றது. மூத்த தலைவர் சகோ.ஹைதர் அலி அவர்கள் ஆம்புலன்ஸ் சாவியை நகர நிர்வாகிகளிடம் ஒப்படைத்தபோது ...
 

ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு

ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவருமான பேரா.முனைவர். எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் தனது குவைத் மற்றும் சவூதி கிழக்கு மண்டல சுற்றுப்பயணத்தை முடித்...
More:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக