வியாழன், 7 பிப்ரவரி, 2013

கோவை மமக மாநாட்டு தீர்மானங்கள்


கோவை மமக மாநாட்டு தீர்மானங்கள்

1. இட ஒதுக்கீடு
அ) தற்போது தமிழகத்தில் நடைமுறையில் உள்ள பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஏழு சதவீதமாக உயர்த்தித் தரவேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தருமாறு இம்மாநாட்டின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.
ஆ) இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு 15 சதவீத இட ஓதுக்கீடு வழங்கப்பட வேண்டுமென நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் அறிக்கை அறிவுறுத்துகிறது. இந்த அளவுப்படி உடனே இட ஓதுக்கீடு வழங்கி அதில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிட உடனே மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்மாநாட்டின் வாயிலாக வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.
2. பூரண மது விலக்கு
தமிழகத்தில் 2 கோடி பேர் மது விரும்பிகளாக மாறி விட்டனர். பல்வேறு குற்றச் செயல் களுக்கும் சாலை விபத்துக்களுக்கும் மதுவே காரணம் என்ற நிலையில் இனியும் மதுக் கடைகள் நீடிப்பது நியாயமில்லை. எனவே தமிழக அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் முழு மது விலக்கை உடனே அமுல்படுத்த வேண்டுமாய் இம் மாநாட்டின்...

விஸ்வரூபம் திரைப்படம்: முத்தரப்பு பேச்சுவார்த்தை

விஸ்வரூபம் திரைப்படக் காட்சிகள் தொடர்பாக முஸ்லிம்களின் கூட்டமைப்பு, கமல்ஹாசன் தரப்பு மற்றும் அரசுத் தரப்பு என முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்ஷாஅல்லாஹ் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் நடைபெற உள்ளது.

விஸ்வருபம் தடை நீ்டிப்பு : உயர்நீதிமன்றம்

விஸ்வரூபம் படத்துக்கான தமிழக அரசின் தடையை நீக்கி, நேற்று 29.01.2013 இரவு 10 மணிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக