செவ்வாய், 3 ஜூலை, 2012

போதையில் மிதக்கும் இளம் பெண்கள்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்!



on 03 July 2012.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள பள்ளிகளில் இங்கிலாந்து சுகாதாரத்துறை ஒரு ஆய்வு நடத்தியது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த 55 சதவீதம் இளம் பெண்கள் தீவிர மதுவுக்கு அடிமையாகி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் மாதத்தில் 5 தடவைக்கு மேல் மது அருந்துகின்றனர்.

பெரும்பாலான பெண்கள் எப்போதும் போதையில் மிதப்பதையே விரும்புகின்றனர். அதே நேரத்தில் அவ்வப்போது மிதமாக குடிப்பவர் பட்டியலில் போர்த்துக்கல், மால்டா மற்றும் எஸ்டோனியா நாட்டு பெண்கள் உள்ளனர். இந்த பட்டியலில் இங்கிலாந்து வாலிபர்களும் இடம் பிடித்துள்ளனர்.


இந்த அறிக்கையை அரசின் பொதுத்துறையிடம் சுகாதாரத்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், அளவுக்கு அதிகமாக மது குடிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களால் தான் குற்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன. எனவே, அவற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

eutamilar thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக