புதன், 22 பிப்ரவரி, 2012

குவைத்தில் தமுமுக திருவிழா


குவைத்தில் தமுமுக திருவிழா

E-mail Print PDF
குவைத்தில் தமுமுக 2005 இல் தொடங்கப்பட்டாலும் ஏதோ ஒரு சில தடங்கல்கள் ஏற்ப்பட்டு அதன் வளர்ச்சி பாதியில் நின்று விடுகிறது அதை போன்று நிர்வாகிகளும் தங்கள் செயல்பாடுகளை துரிதபடுத்தாமல் இருந்து விட்டனர். பேராசிரியர் தாஜ்தீன் அவர்களின் தலைமையின் கீழ் கடந்த ஆறு மாதத்திற்கு முன் நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டு பழைய உறுப்பினர்கள் அனைவரையும் சீர் செய்யப்பட்டும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டும் வருகிறது. முன்னப்பொழுதை விட தமுமுக குவைத்தில் வேகமாகவும் பரபரப்பாகவும், சுறுறுசுப்பாகவும் செயல்பட்டுவருகிறது.
கைதான் தமுமுக கிளை சார்பாக தாவாபணி:
இந்த சூழலில் தற்சமயம்17.02.2012 அன்று வெள்ளி கிழமை பேராசிரியர் தாஜ்தீன் அவர்களின் தலைமையின் கீழ வாப்ரா பகுதிக்கு கைதான் தமுமுக கிளை சார்பாக ஒரு குழு அழகான முறையில் சென்று தாவாபணி செய்தனர்.
மஹ்புலா தமுமுக ஒருங்கிணைப்புக் கூட்டம்:
சகோ,பெருங்களுர் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் தலைமையின் கீழ் ஒரு குழு சென்று மஹ்புலா தமுமுக ஒருங்கிணைப்புக் கூட்டமும் நடந்தது.
மிஸ்ரிப் தமுமுகவின் கிளைக் கூட்டம்
மிஸ்ரிப் தமுமுக வின் கிளைக் கூட்டம் மிர்காப் சிட்டியில் வைத்து கிளைத்தலைவர் கமருதீன் தலைமையிலும் நடந்தது பின்பு குவைத் மண்டல தமுமுகவின் மாதாந்திர கூட்டமும் நடந்தது குவைத் மண்டல தமுமுக தலைவர் தேர்தல் குவைத் தமுமுகவின் மண்டலக்கூட்டம் பெருங்களுர் முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கிராத் ஓதி தொடக்கி வைத்தார். அல்ஹம்து[ ] சூரா வின் விளக்கம் குறித்து அற்புதமாக பேராசிரியர் தாஜ்தீன் அவர்கள் அனைவருக்கும் புரியும் வண்ணம் வகுப்பெடுத்தார்.
இக் கூட்டத்தில் சகோ எஸ்.கே.சம்சுதீன் அலீம் அவர்கள் சங்கபரிவார் சூழ்ச்சி குறித்து விளக்கி முஸ்லிம்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் என சிறப்புரையாற்றி குவைத்தில் தமுமுக வின் மண்டல தேர்தல் போட்டின்றி தேர்தல் நடக்க அனைவரும் முன் வர வேண்டும் என பேசினார். இதில் மண்டல தமுமுக தலைவர் மட்டும் தேர்வு செய்யப்பட்டது.
மண்டல தமுமுக தலைவராக சகோ, பேராசிரியர் தாஜ்தீன் அவர்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். மற்ற பொறுப்புகள் தலைவர் அவர்கள் அறிவிப்பார் என்ன முடிவு செய்யப்பட்டது.
Last Updated ( Sunday, 19 February 2012 14:56 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக