வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

விழுப்புரம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம்


விழுப்புரம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம்

E-mail Print PDF
விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 6 , 8 , 9 , 16 ஆகிய வார்டுகளில் உள்ள சாலைகள் மற்றும் சாக்கடை செப்பனிடுதல் தொடர்பாக விழுப்புரம் நகரம் 6 , 8 , 9 , 16 ஆகிய வார்டுகளில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான சூழ்நிலையில் குண்டும், குழியுமாக, கழிவு நீர் சாலைகளில் ஓடும் சூழ்நிலை இருக்கிறது. பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் மிகவும் சிரமத்திற்கிடையே சென்று வருகின்றனர். இந்த வார்டுகளில் கொட்டப்படும் குப்பைகள் அல்லாமல் உள்ளதால், மேலும் அவ்வப்போது பெய்து வரும் மழையால் குப்பைகள் சாலையின் நடுவில் சேர்ந்தும், குழியாக உள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கியும் இருப்பதால் பள்ளம் தெரியாமல் நடந்து செல்பவர்கள் கீழே விழுந்தும், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளம் தெரியாமல் விழுந்தும் அடிபட்டு வருகின்றனர். கழிவுநீர் தேங்கி இருப்பதால் சுகாதாரக்கேடாகவும், கொசுக்கள் உற்பத்தியாகும் தொழிற்சாலையாகவும் இருப்பதால் இங்கு குடியிருப்பவர்கள் அடிக்கடி ஜுரம் மற்றும் நோயினால் அவதியுற்று வருகின்றனர். எனவே மேற்படி வார்டுகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணம் செய்து சாலையை சீரமைத்தும், வாய்க்கால்களை தூர்வாரி கொசு மருந்து அடித்தும், குப்பைகளை தினந்தோறும் அள்ளி செல்லவும் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் நகராட்சியில், விழுப்புரம் நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பில்02-02-2012 அன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் நகராட்சி அலுவலக முற்றுகை போராட்டம்



 

Add comment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக