வியாழன், 2 பிப்ரவரி, 2012

1.2.2012 அன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் பேரா. ஜவாஹிருல்லா அவர்களின் கேள்வியும், அமைச்சரின் பதிலும்...



E-mail Print PDF
முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, சென்ற ஆண்டு ஹஜ் பயணிகளுடைய எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக தமிழக முதலமைச்சர் மேற்கொண்ட முயற்சிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மஹாராஷ்டிராவில், கேரளாவில் மற்றும் வேறு சில மாநிலங்களில் ஹஜ் செல்லும் பயணிகள் புறப்படுவதற்கு முன்பாக தங்குவதற்கு Haj House அரசாங்கத்தின் சார்பாக கட்டப்பட்டிருக்கிறது. சென்னையிலே தனியாருடைய இடத்தில்தான் தங்கவேண்டிய ஒரு நிலை இருக்கின்றது. இந்த ஆட்சியிலே, சென்னையிலே, அரசாங்கத்தின் சார்பாக Haj House கட்டுவதற்கு அரசு முன்வருமா என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.
மாண்புமிகு திரு. அ. முஹம்மத்ஜான்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்தத் திட்டத்தை மாண்புமிகு அம்மா அவர்களுடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று நிச்சயமாக இது பரிசீலிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக